பள்ளிபாளையம் நகராட்சி முன்களப் பணியாளர்களுக்கு சிறப்பு ஆலோசனை வழங்கல்
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, வீடுவீடாகச் சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பள்ளிபாளையம் நகராட்சி பகுதியிலும் அத்தகைய கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதற்காக, பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் இன்று, நகராட்சியில் பணிபுரியும் முன்கள பணியாளர்களுக்கு, வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களிடம் மேற்கொள்ள வேண்டிய சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பரிசோதனைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதில், பொதுமக்களிடம் எப்படி பரிசோதனை மேற்கொள்வது, பல்ஸ் மீட்டர் பார்ப்பது, வெளியூர் நபர்களை எவ்வாறு கணக்கெடுப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை, பள்ளிபாளையம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சரவணன் மற்றும் சுகாதார அதிகாரி நகுல்சாமி ஆகியோர் வழங்கினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu