பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய விவசாயிகள் சங்க முதலாவது மாநாடு

பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய விவசாயிகள் சங்க முதலாவது  மாநாடு
X

பள்ளிபாளையம் தெற்கு ஒன்றியம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க முதலாவது ஒன்றிய மாநாடு மோளக்கவுண்டம்பாளையத்தில் நடைபெற்றது

பள்ளிபாளையம் அருகே விவசாயிகள் சங்க தெற்கு ஒன்றிய முதலாவது மாநாடு நடைபெற்றது.

பள்ளிபாளையம் தெற்கு ஒன்றியம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க முதலாவது ஒன்றிய மாநாடு மோளக்கவுண்டம்பாளையத்தில் பூலக்காடு மணி தலைமையில் நடைபெற்றது. ரத்தினம் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். சண்முகம் வரவேற்றார். நல்லாக்கவுண்டர் மாநாட்டினை துவக்கி வைத்தார். குமரேசன் தீர்மானங்களை முன்மொழிய, மேகநாதன், முருகேசன், குமார், சிவகாமி உள்ளிட்டவர்கள் வழி மொழிந்தனர்.

புதிய தலைவராக கோவிந்தராஜ், செயலராக குமரேசன், பொருளராக மேகநாதன் உள்ளிட்ட பலர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். பெதக்காட்டூர் பகுதியில் சாய பூங்கா அமைவதை நிறுத்த வேண்டும், கலியனூர் பெருமாள் கோவில் அருகில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், விண்ணப்பித்த விவசாயிகளுக்கு உடனே மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!