காகித தினம் கொண்டாடிய சேஷசாயி காகித ஆலை நிர்வாகத்தினர்
ஆண்டுதோறும் ஆக. 1 காகித தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காகித ஆலை நிர்வாகத்தினர் தற்போது காகித தினம் கொண்டாடி வருகின்றனர். இது குறித்து நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் கூறியதாவது:
காகிதத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி முன்னாள் பிரதம மந்திரி நேரு 1940, ஆக 1ல் புனேயில் கையால் தயாரிக்கப்படும் காகித நிறுவனத்தை துவக்கினார். உலகின் காகித உற்பத்தியில் இந்திய காகித தொழில் 5 சதவீதம் ஆகும். அச்சிடுதல் மாற்று எழுதுதல் தாள், செய்தி தாள், பேக்கிங் பேப்பர், டிஸ்யு பேப்பர் என பேப்பர் நான்கு வகைகளில் தயாரிக்கப்படுகிறது. மரம், வைக்கோல், கரும்பு சக்கை, மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதம் ஆகியவற்றால் காகிதம் தயாரிக்கப்படுகிறது.
காகித தினத்தையொட்டி பல்வேறு பள்ளிகளில் பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது. திறந்த வெளி அரங்கத்தில் காகிதம் குறித்து நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரிய பலூன் பறக்கவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 4 பங்கு மரங்கள் விவசாயிகளால் நடப்பட்டு, அதில் இரு பங்கு மரங்கள் மட்டும் வெட்டப்படுகின்றன. கொரோனா சமயத்தில் சரிவை சந்தித்த பேப்பர் மார்க்கெட் தற்போது பழையபடி நல்ல முன்னேற்றத்தை கண்டு வருகிறது. கணினி, கால்குலேட்டர் தவிர்த்து மாணவ, மாணவர்களுக்கு பேப்பர்களில் எழுதும் பழக்கத்தை முதன்மை பாடமாக கற்று கொடுக்க வேண்டும் என கூறினார்.
இதில் நிர்வாக அலுவலர் அழகர்சாமி உள்பட பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu