பள்ளிபாளையம் ஆர்.ஐ. அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்

பள்ளிபாளையம் ஆர்.ஐ. அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்
X

பள்ளிபாளையம் ஆர்.ஐ. அலுவலகம் முன்பு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

பள்ளிபாளையம் ஆர்.ஐ. அலுவலகம் முன்பு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் வட்டம், எலந்தகுட்டை ஊராட்சி சின்னார்பாளையம் பகுதியில் வசிக்கும் ஈஸ்வரன், ஆறுமுகம் ஆகியோருக்கு சொந்தமான சர்வே எண் : 306/1 உள்ள நிலத்தை மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகம் அமைக்க தேவை என கூறி பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

இதனை கண்டித்தும், மீண்டும் அனுபவ நிலங்களை சம்பந்தப்பட்டவிவசாயிகளுக்கு ஒப்படைக்க கோரியும், அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க கோரியும், பள்ளிபாளையம் ஆர்.ஐ. அலுவலகம் முன்பு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் மாவட்ட தலைவர் பெருமாள் தலைமையில் முற்றுகை போரட்டம் நடைபெற்றது. கோரிக்கைகள் குறித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!