பார்டரை தாண்டி வரக்கூடாது... ஈரோடு எல்லையில் தவிக்கும் பள்ளிபாளையம் மக்கள்!
மாவட்ட எல்லையான ஈரோடு செக்போஸ்ட் பகுதிக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படாததால், அணிவகுத்து காத்திருக்கும் பள்ளிபாளையம் பகுதி வாகனங்கள்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் இருந்து, அருகிகேயுள்ள ஈரோடு மாவட்டத்திற்கு, 70 சதமானவர்கள் உதிரிபாகங்கள், வேலைக்கு, காய்கறி வாங்குவது, மருத்துவத்தேவைக்கு, அத்தியாவசிய பொருள் வாங்குவதற்காக எனப் பல்வேறு வேலைகளுக்காக மாவட்ட எல்லையாக உள்ள பள்ளிபாளையம் பாலத்தின் வழியே, ஈரோட்டுக்கு தினந்தோறும் சென்று வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழலில் சிறிய தளர்வுகளுடன் வாகன போக்குவரத்து அனுமதியளிக்கபட்டுள்ளது. ஆனால், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பாலம் வழியே, ஈரோடு செல்லும் வாகன ஓட்டிகளை, மாவட்ட எல்லையான ஈரோடு கருங்கல்பாளையம் செக்போஸ்ட் பகுதியில் காவலர்கள் தடுத்து நிறுத்தி இ-பாஸ் கேட்கின்றனர்.
ஒருவேளை இ-பாஸ் இருந்தாலும் மிகமிக அத்தியாவசியத் தேவைகளுக்கு தவிர ஈரோட்டுக்குள் வாகனங்கள் செல்ல அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்பி வருவதால், ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டும் வேலைக்கு செல்ல முடியாமல், பள்ளிபாளையம் பகுதி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பள்ளிபாளையம் பகுதி மக்கள் சிலர் கூறுகையில், பள்ளிபாளையத்தில் வசித்து வந்தாலும் வேலை செய்வது ஈரோடு பகுதி என்பதால் தினந்தோறும் இந்த சாலை வழியேதான் பயணத்தை மேற்கொண்டு வருகிறோம். தற்பொழுது இ-பாஸ் கேட்கின்றனர். அது இருந்தாலும் கூட, சரியான பதில் சொல்லாமல் திருப்பி அனுப்புவதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். தமிழக அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளிபாளையம் வழியே ஈரோடு செல்வதற்கு முழுமையான அனுமதி அளிக்க வேண்டும் என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu