பல்லாங்குழி ரோடு... வாகன ஓட்டிகள் பெரும்பாடு! ஒட்டமெத்தை ரவுண்டானா நிலை இது!

பள்ளிபாளையம் ஒட்டமெத்தை ரவுண்டானா பகுதியில் ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். வாகனம் ஒன்று குழியில் சிக்கி, நிலை தடுமாறியது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் இருந்து, கால் மிதியடி மேட் ஏற்றிக் கொண்டு வெடியரசம்பாளையத்திற்கு டாட்டா ஏசி வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. பள்ளிபாளையம் ஒட்டமெத்தை ரவுண்டானா பகுதி வளைவில் திரும்பும்போது, எதிர்பாராவிதமாக நிலை தடுமாறி விழுந்ததில் வாகனம் கவிழ்ந்தது.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் டாட்டா ஏசி வாகனம் தூக்கி நிறுத்தப்பட்டது. வாகனத்தில் இருந்த கால் மிதியடி, ஜவுளிகள் வேறு வாகனத்திற்கு மாற்றி எடுத்துச்செல்லப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை .

ஒட்டமெத்த ரவுண்டானா பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக திரும்புவதும், அவ்வாறு திரும்பும் இடத்தில் பெரிய அளவில் ரோடு குண்டும் குழியுமாக இருப்பதுமே, இதுபோன்ற விபத்துகளுக்கு காரணமாகிறது. அவ்வழியே வேகமாக வரும் வாகனங்கள் நிலைதடுமாறி அவ்வப்போது விழுவதும் தொடர்கதையாகி வருகிறது.

எனவே, ஒட்டமெத்த ரவுண்டானா பகுதியில், குண்டும் குழியுமான சாலையை சீரமைத்து ரவுண்டானா பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று, பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture