பள்ளிபாளையத்தில் 'வாடைக்கு விடை' கிடைச்சாச்சு

பள்ளிபாளையத்தில் வாடைக்கு விடை கிடைச்சாச்சு
X

பள்ளிபாளையம், ஒட்டமெத்தை பகுதியில் சாக்கடை கழிவுநீரை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ள பொக்லின் இயந்திரம்.

 பகுதி சாக்கடையை சுத்தம் செய்யும் பொக்லின் இயந்திரம்.

பள்ளிபாளையம் ஒட்டமெத்தை பகுதியில் சாக்கடை கழிவு நீர் வெளியேறியதை நகராட்சி நிர்வாகம் சுத்தப்படுத்தியது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒட்டமெத்தை செல்லும் சாலை அருகில் உள்ள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் சாலையில் ஓடி போக்குவரத்துக்கும், நடந்து செல்லுக்கு பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்து வந்தது. கழிவு நீரானது சாலையில் தேங்குவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பள்ளிபாளையம் நகராட்சிக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதனை கருத்தில் கொண்டு உடனடியாக களத்தில் இறங்கிய பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகத்தினர், பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு சாக்கடையை தூர்வாரிசுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!