பள்ளிப்பாளையம் சாலையின் நடுவே பள்ளம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

பள்ளிப்பாளையம் சாலையின் நடுவே பள்ளம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
X

பள்ளிப்பாளையம் சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளம்

பள்ளிப்பாளையத்தில் கரும்பு லாரி கவிழ்ந்து சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவல் நிலையம் அருகே சம்பவத்தன்று வழி தவறி வந்த கரும்பு லாரி ஒன்று வாகனத்த்தை பின்பக்கமாக எடுக்க முயற்சிக்கும்போது அதிக பாரம் காரணமாக சாலையில் லாரியின் சக்கரம் அழுத்தப்பட்டு சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால் நிலை தடுமாறிய லாரி காவல் நிலையம் எதிரே சாய்ந்தது.

காவல்துறை உதவியுடன் கரும்பு லாரியை தூக்கி நிறுத்தப்பட்டது. அந்த சாலையில் அவசரமாக சீரமைக்கப்பட்டது. முழுமையாக சீரமைக்கப்படாததால் அந்த பள்ளத்தை மறைக்கும் வகையில் போலீசார் தலை தடுப்பை வைத்துள்ளனர். இதனால் இரு சக்கர வாகனம, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அவ்வழியே செல்ல முடியாமல் தடுமாறுகின்றனர். சில நேரங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் உடனடியாக அந்த பள்ளமான சாலையை சீரமைத்து தர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்