அரசு பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியம் உயிர் பிழைத்த சைக்கிளில் வந்த நபர்!

அரசு பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியம்   உயிர் பிழைத்த சைக்கிளில் வந்த நபர்!
X

அரசு பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியம் உயிர் பிழைத்த சைக்கிளில் வந்த நபர்

பள்ளிபாளையம் அருகே அரசு பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் சைக்கிளில் வந்த நபர் உயிர் பிழைத்தார்.

பள்ளிபாளையம் அருகே அரசு பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் சைக்கிளில் வந்த நபர் உயிர் பிழைத்தார்.

பள்ளிபாளையம் வெப்படையிலிருந்து சங்ககிரி செல்லும் சாலையில், மக்கிரிபாளையம் அருகே, அரசு பேருந்து வருவதை கவனிக்காமல், செளதாபுரம் பிரிவிலிருந்து சைக்கிளில் வந்த நபர் சாலையை கடக்க முயன்றார். அப்பொழுது ஈரோட்டிலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் ஓட்டுனர், சைக்கிளில் வந்த நபர் மீது மோதாமல் இருக்க பேருந்தினை சாலையின் எதிர் திசையில் லாவகமாக திருப்பினார். இதனால் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் அரசு பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் நூலிழையில் உயிர் தப்பினார். மேலும் எதிர் திசையில் வாகனங்கள் ஏதும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தற்போது இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து சமூக ஆர்வலர் பிரகாஷ் கூறியதாவது:

பல இடங்களில் இணைப்பு சாலையில் இருந்து வருபவர்கள், நெடுஞ்சாலையில் வாகனங்கள் வருகிறதா? என்பது குறித்து அறிந்து கொள்ளாமல், ஒரு பக்கம் மட்டும் பார்த்துக்கொண்டு வாகனம் ஓட்டுவதால் எதிர்பாராத வகையில் அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன. சைக்கிள் காரர் மீது மோதாமல் இருக்க, அருகில் உள்ள டிவைடர் பிரிவு பகுதியில் சாமர்த்தியமாக பேருந்தை இயக்கிய ஓட்டுனரை பயணிகள், பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். இது போன்ற ஓட்டுனர்களை பாராட்டி ஊக்குவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story
ai in future agriculture