குற்றவாளிகளை பிடிப்பதில் வேகம்: பள்ளிபாளையம் ஆய்வாளருக்கு பாராட்டு

குற்றவாளிகளை பிடிப்பதில் வேகம்:  பள்ளிபாளையம் ஆய்வாளருக்கு பாராட்டு
X

பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் கே சந்திரகுமாரை, மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் பாராட்டினார். 

குற்றவாளிகளை பிடிப்பதில் திறம்பட செயல்பட்டதாக, பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சந்திரகுமாரை, மேற்கு மண்டல ஐஜி பாராட்டினார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 20 இடங்களில் நகை பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் ஐபிஎஸ் உத்தரவின்படி, காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்தனர்.

இதில் சிறப்பாக பணியாற்றியதற்காக, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் கே சந்திரகுமாருக்கு, மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் பாராட்டினார். அத்துடன், சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகையையும் அவர் வழங்கினார். இந்த நிகழ்வின் போது, சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story