குமாரபாளையம் தொழிலாளிக்கு சைக்கிள் வழங்கிய பள்ளிபாளையம் சேர்மன்

குமாரபாளையம் தொழிலாளிக்கு சைக்கிள் வழங்கிய பள்ளிபாளையம் சேர்மன்
X

குமாரபாளையம் மில் தொழிலாளி முதியவர் மூர்த்திக்கு பள்ளிபாளையம் சேர்மன் செல்வராஜ் சைக்கிள் வழங்கினார்.

குமாரபாளையம் தொழிலாளிக்கு பள்ளிபாளையம் சேர்மன் சைக்கிள் வழங்கினார்.

குமாரபாளையம் குள்ளங்காடு பகுதியில் வசிப்பவர் மூர்த்தி, 82. தனியார் மில் தொழிலாளி. இவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட சைக்கிள் சில நாட்கள் முன்பு காணாமல் போனது. இது குறித்து தொழிலாளர்கள் சங்கத்தினர் மொபைல் மூலம் தகவல் பரப்பினர்.

இதனை கண்ட பள்ளிபாளையம் நகராட்சி சேர்மன் செல்வராஜ் இவருக்கு நேற்று புதிய சைக்கிள் வாங்கி கொடுத்தார். அப்போது கவுன்சிலர் பெரியசாமி, பஞ்சாலை தொழிலாளர் சங்க நிர்வாகி சண்முகம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். சைக்கிள் வாங்கி கொடுத்த சேர்மனுக்கு மூர்த்தி நன்றி தெரிவித்தார்.

இது பற்றி சண்முகம் கூறுகையில், முதியவர் மூர்த்திக்கு மனைவி இல்லை. இரு மகன்கள், இரு மகள்கள் இருந்தும் தன சுய உழைப்பின் மூலம் கிடைக்கும் வருமானத்தில்தான் வாழ்வேன் என உறுதியோடு இன்று வரை மில் கூலி வேலைக்கு 5 கி.மீ. தூரம் சைக்கிளில் சென்று தினம் 200 ரூபாய் வருமானம் பெற்று வாழ்ந்து வருகிறார்.

Tags

Next Story
ai as the future