விளை நிலத்தில் உயர் மின்கோபுரமா? விவசாயிகள் எதிர்ப்பு
நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகில் உள்ள பாதரை ஊராட்சியில், தோப்புக்காடு முதல், தனியார் நூற்பாலை வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு விவசாய விளை நிலங்களை பாதிக்கும் வகையில், உயர்மின்கம்பம் அமைத்து மின்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், இப்பகுதியில் வசிக்கும் எண்ணற்ற சிறு குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். ஏற்கனவே படைவீடு பேரூராட்சியில் மோடமங்கலம் ஊராட்சி, பாதரை ஊராட்சி, ஆனங்கூர் ஊராட்சி உள்ள தனியார் நூற்பாலைகளுக்கு சாலையோரம் கேபிள் அமைத்து மின்சாரம் கொண்டு சென்று இணைப்பு கொடுத்துள்ளனர்.
எனவே தற்போது அமல்படுத்த உள்ள திட்டத்தையும் சாலையோரம் கேபிள் அமைத்து மின் திட்டத்தை அமலாக்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி, உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் பி பெருமாள் தலைமையில், விவசாயிகளின் தொடர் காத்திருப்பு போராட்டம், வெப்படை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில், குடும்பத்துடன் விவசாயிகள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu