குமாரபாளையத்தில் ஓவியர் சங்க புதிய நிர்வாகிகள் நியமனம்

குமாரபாளையத்தில் ஓவியர் சங்க புதிய   நிர்வாகிகள் நியமனம்
X

குமாரபாளையத்தில் ஓவியர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

குமாரபாளையத்தில் ஓவியர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

குமாரபாளையத்தில் ஓவியர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு வட்டார செயலர் பாஸ்கரன், வட்டார துணைத் தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.

புதிய தலைவராகக் கதிர் ஆர்ட்ஸ் கதிரவன், துணைத் தலைவராகத் தமிழன் ஆர்ட்ஸ் சிவா, செயலராக ஜெயபால் ஆர்ட்ஸ் கோபால், உதவி செயலராக மகா ஆர்ட்ஸ் மகாலிங்கம், பொருளாளராக முன்னாள் கவுன்சிலர் சூர்யா ஆர்ட்ஸ் சிங்காரவேலு, துணை பொருளாளராக ராஜா ஆர்ட்ஸ் செல்வராஜ், செயற்குழு உறுப்பினராகக் கனி ஆர்ட்ஸ் ரவிச்சந்திரன், சீனு ஆர்ட்ஸ் சீனிவாசன், செய்தி தொடர்பாளராகச் சுசி ஆர்ட்ஸ் சுசிகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் உறுப்பினர்கள் நிதி உதவியுடன் சங்க நிர்வாகி இறந்தால் அந்த குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குதல், தேவைப்படும் சங்க உறுப்பினர்கள் பிள்ளைகளுக்குக் கல்வி நிதியுதவி வழங்குதல், உடல்நலம் பாதிக்கப்பட்ட உறுப்பினரின் குடும்பத்தாருக்கு மருத்துவ நிதி வழங்குதல், ஓவியக்கலையை வளரச் செய்திடப் பள்ளி மாணவ, மாணவர்களிடையே ஓவியப்போட்டி நடத்தப்பட்டுச் சிறந்த ஓவியங்களுக்கு மாநில நிர்வாகிகள் கையால் பரிசுகள் வழங்குதல், நலவாரியத்தில் ஓவியர்களுக்கு எனத் தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை மனு வழங்குதல் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story
ai in future agriculture