காவிரியில் குதித்து ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர் தற்கொலை

காவிரியில் குதித்து ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர் தற்கொலை
X

காவிரியில் குதித்து பலியான ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளரை மீட்கும் வெப்படை தீயணைப்பு படையினர்.

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குதித்து ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செங்கோடு பகுதியில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வருபவர் விஜயகுமார் (வயது 39). இவரது மனைவி கீதா. இவர்களுக்கு ரூபா, சுபா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். விஜயகுமார் பல நாட்களாக தொழில் நிலை சரியில்லை என்று மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பள்ளிபாளையம் காவிரி ஆற்றின் பாலம் பகுதிக்கு தனது பைக்கில் வந்துள்ளார். யாரும் எதிர்பாராத வகையில் பைக்கை நிறுத்திவிட்டு, பாலத்தின் மீது ஏறி கீழே தண்ணீரில் குதித்துள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் பள்ளிபாளையம் போலீசார் மற்றும் வெப்படை தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போக்குவரத்தை சீர் படுத்தினர். நிலைய அலுவலர் சிவகுமார் தலைமையில் வந்த தீயணைப்பு படையினர் பரிசல் மூலம் சென்று நீரில் மூழ்கி சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி சடலத்தை மீட்டனர். இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
துணை வட்டாட்சியரிடம் ரூ. 2 கோடி மோசடி..! 3 போ் மீது வழக்குப் பதிவு..!