குமாரபாளையம் வாக்குப்பதிவு நிலவரம்

குமாரபாளையம்  வாக்குப்பதிவு நிலவரம்
X

குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் 

குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் நகரமன்ற தேர்தலில் குமாரபாளையத்தில் 76.10 % பள்ளிபாளையத்தில் 75.39 % வாக்களித்துள்ளனர்.

குமாரபாளையம் நகரமன்ற தேர்தலில் 33 வார்டுகளுக்கு 188 பேர் போட்டியிடுகின்றனர். ஆண் வாக்காளர்கள் 32 ஆயிரத்து 445, பெண் வாக்காளர்கள் 35 ஆயிரத்து 002, இதர பிரிவினர் 17 ஆக மொத்தம் 67 ஆயிரத்து 464 பேர் உள்ளனர். இதில் ஓட்டினை பதிவு செய்தவர்கள் ஆண் வாக்காளர்கள் 24 ஆயிரத்து 764, பெண் வாக்காளர்கள் 26 ஆயிரத்து 570, இதர பிரிவினர் 4 ஆக மொத்தம் 51 ஆயிரத்து 338 பேர் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்தனர். ஓட்டு சதவீதம் 76.10 %

பள்ளிபாளையம் நகரமன்ற தேர்தலில் 21 வார்டுகளுக்கு 88 பேர் போட்டியிடுகின்றனர். ஆண் வாக்காளர்கள் 18 ஆயிரத்து 503, பெண் வாக்காளர்கள் 19 ஆயிரத்து 305, மொத்தம் 37 ஆயிரத்து 808 பேர் உள்ளனர். இதில் ஓட்டினை பதிவு செய்தவர்கள் ஆண் வாக்காளர்கள் 13 ஆயிரத்து 895, பெண் வாக்காளர்கள் 14 ஆயிரத்து 609, மொத்தம் 37 ஆயிரத்து 808 பேர் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்தனர். ஓட்டு சதவீதம் 75.39.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!