மாற்றுக் கட்சியிலிருந்து தி.மு.க.வில் இணைந்த 200 பேர்..!

மாற்றுக் கட்சியிலிருந்து தி.மு.க.வில் இணைந்த 200 பேர்..!
X

குமாரபாளையத்தில் மாற்றுக்கட்சியிலிருந்து கட்டுமான தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்ட நபர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.

குமாரபாளையத்தில் மாற்றுக்கட்சியிலிருந்து கட்டுமான தொழிலாளர்கள் 200 நபர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.

குமாரபாளையத்தில் மாற்றுக்கட்சியிலிருந்து கட்டுமான தொழிலாளர்கள் 200 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.

தி.மு.க.வின் வளர்ச்சி திட்டங்கள் பற்றி பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லி, மாவட்ட செயலர், நகர செயலர்கள் முயற்சியின் பேரில் பல்வேறு பகுதியில் மாற்றுக்கட்சியியனர் தி.மு.க.வில் இணைந்து வருகிறார்கள்.

இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலர் மதுரா செந்தில் தலைமையில், கட்டுமான தொழிற்சங்கத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் அவர்கள் இதுவரை இருந்த கட்சியை விட்டு, கட்டுமான சங்க நிர்வாகி தி.மு.க.வில் இணைந்தனர்.

இதில் நகர செயலரும், நகராட்சி தலைவருமான விஜய்கண்ணன், நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், மாவட்ட பொருளர் ராஜாராம், முன்னாள் நகர செயலர் செல்வம், தொழிலாளர் அணி துணை தலைவர் அழகேசன், துணை அமைப்பாளர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

அதைத்தொடர்ந்து பேச்சுத்திறமை என்பது கட்சியில் குறைந்து வருகிறது. இதை தவிர்க்க தி.மு.க. சார்பில் பேச்சுப் பயிற்சி முகாம் வாரம் ஒருமுறை நடத்தப்படுகிறது. நகர தி.மு.க. செயலர் விஜய்கண்ணன், ஞானசேகரன் இதனை துவக்கி வைத்தனர். பேச்சாளர் அன்பழகன் பயிற்சியினை துவக்கி வைத்தார்.

இது குறித்து மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

தி.மு.க. மட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சியிலும் இருந்த முன்னாள் தலைவர்கள், பேச்சாளர்கள். இரவு பகலாக பேசித்தான் மத்திய, மாநிலங்களில் ஆட்சியில் அமர்ந்தனர். அண்ணா,கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, உள்ளிட்ட தலைவர்கள் இரவு, பகலாக தேர்தல் பிரசாரங்கள் செய்வார்கள்.

இவர்களின் பேச்சை கேட்க பொதுமக்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். கட்சியின் கொள்கைகளை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல, ஒவ்வொரு கட்சி சார்பில் தலைமைக்கழக பேச்சாளர்கள் என நியமனம் செய்யப்பட்டனர். மூத்த அரசியல்வாதிகள் மேடையில் பேசும் முன்பாக, தலைமைக்கழக பேச்சாளர்கள் கட்சியின் கொள்கைகள், கட்சி உருவான விதம், கட்சி நிறுவனர் மற்றும் நிர்வாகிகள் செய்த தியாகங்கள், ஆகியவற்றை பொதுமக்களிடம் எடுத்துரைப்பார்.

தற்போதுள்ள இளைய தலைமுறையினர் மற்றவர்களிடம் பேசுவது குறைந்து விட்டது. மொபைல் போனில் குறுந்தகவல் அனுப்பி அதன் மூலம் பேசி வருவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். இதை தவிர்க்க இளைஞர்கள் பேச்சாற்றல் பெற வேண்டும் என்பதற்காக பேச்சு பயிற்சி மிகவும் அவசியமாகிறது. அதை கருத்தில் கொண்டே திமுக சார்பில் பேச்சுப்பயிற்சி வழங்கப்படவுள்ளது என்றனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!