ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலருக்கு நிர்வாகிகள் நேரில் வாழ்த்து

ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலருக்கு நிர்வாகிகள் நேரில் வாழ்த்து
X

குமாரபாளையம் ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலருக்கு நிர்வாகிகள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

AIADMK Latest News in Tamil Today -குமாரபாளையம் ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலருக்கு நிர்வாகிகள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

AIADMK Latest News in Tamil Today -குமாரபாளையம் ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலருக்கு கட்சியின் நிர்வாகிகள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

அ.தி.மு.க.வில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராகவும், ஓ.பி.எஸ். எனப்படும் பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இந்நிலையில் கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பின் தற்காலிக பொதுசெயலர் தேர்வு செய்வதற்காக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் எடப்பாடி பழனிசாமி தேரவானதாக கூறப்பட்டது. ஓ.பி.எஸ். இது குறித்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் நாடினார். இந்நிலையில் ஓ.பி.எஸ். தனது அணிக்கு மாநிலம் முழுவதும் நிர்வாகிகளை நியமிக்க தொடங்கினார். அதன்படி, தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளை ஓ.பன்னீர் செல்வம் நியமித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் அரசியலில் மூத்த தலைவராக பன்ருட்டி ராமச்சந்திரனை, ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். இதனைத்தொடர்ந்து அதிமுக கட்சியின் ஆலோசகராக நியமனம் செய்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த தொடர்ச்சியான அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் அதிமுகவினரிடையே சற்று குழப்படையச் செய்துள்ளது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதி நகர செயலராக முன்னாள் அ.தி.மு.க. நகர செயலர் நாகராஜன், ஓ.பன்னீர்செல்வம் அணியின் நகர செயலராக தேர்வு செய்யப்பட்டார்.

இவருக்கு ஆதரவாக குமாரபாளையம் நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் நந்தினிதேவி, மகாலட்சுமி, ரேவதி ஆகியோர் ஆதரவு கொடுத்துள்ளனர். மேலும் தினகரன் கட்சியில் இருந்தும் பலர் வெளியேறி நாகராஜுக்கு அதரவு கொடுத்தனர்.

இது குறித்து நாகராஜன் கூறியதாவது:

அ.தி.மு.க. கட்சியின் நிரந்தர பொது செயலராக இருந்து வந்தவர் அம்மா. அவர் இருந்த பொறுப்பிற்கு நான் போட்டியிட மாட்டேன் என்று ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக கூறினார். ஆனால், எப்பாடி பழனிசாமி அணியினர் அந்த பொறுப்புக்கு ஈ.பி.எஸ். வரவேண்டும் என்று போட்டியிட தயாரானார்.

மேலும் குமாரபாளையம் நகராட்சி சேர்மன் தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த ஒருவருக்கு ஓட்டு போட சொல்லி அ.தி.மு.க. கவுன்சிலர்களை முன்னாள் அமைச்சர் கட்டாயப்படுத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாத மூன்று கவுன்சியலர்கள் நமது பக்கம் வந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் குமாரபாளையம் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி மேற்கு மாவட்ட செயலராக முன்னாள் அ.தி.மு.க. நகர செயலர் நாகராஜன் தேர்வு செய்யப்பட்டார். இவரை முக்கிய நிர்வாகிகள் பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குமாரபாளையம் கழக நிர்வாகிகள் சீனிவாசன், ராஜ்கணேஷ், வெங்கடேசன், மற்றும் பள்ளிபாளையம், படைவீடு, ஆலாம்பாளையம்,திருச்செங்கோடு, மல்ல சமுத்திரம், எலச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி நிர்வாகிகள் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
அடுத்த புது மொபைல் வந்துருச்சு இத பாருங்க !!ரியல்மி 14X மொபைல் வரப்போகுது!