பேருந்து நிலையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைக்க எதிர்ப்பு

பேருந்து நிலையத்தில் தினசரி காய்கறி  மார்க்கெட் அமைக்க எதிர்ப்பு
X

மார்க்கெட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த பஸ் ஸ்டாண்ட் கடை வியாபாரிகள் சங்க தலைவர் முருகன், சேர்மன் விஜய்கண்ணனிடம் தங்கள் கோரிக்கையை கூறினார்.

குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைக்க பஸ் ஸ்டாண்ட் கடையினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குமாரபாளையம் தினசரி மார்க்கெட் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்ட இருப்பதால், மார்க்கெட் கடைகள் பேருந்து நிலையத்தில் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதையறிந்த பஸ் ஸ்டாண்ட் கடை வியாபாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் கடைகளை அடைத்தனர்.

இது குறித்து பஸ் ஸ்டாண்ட் கடை வியாபாரிகள் சங்க தலைவர் முருகன் கூறுகையில், பஸ் ஸ்டாண்டில் மார்க்கெட் அமைத்தால் எங்கள் வியாபாரம் பாதிக்கும். கொரோனா காலத்தில் ஏற்பட்ட நஷ்டம் இன்னும் தீராமல் உள்ளது. அதற்குள் மீண்டும் இது போல் பிரச்சனை வந்தால் நாங்கள் எப்படி வாழ்வது? இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடைகளை அடைத்துள்ளோம் என கூறினர்.

இது குறித்து நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் கூறுகையில், தினசரி மார்க்கெட் கட்டிடம் கலைஞர் மேம்பாட்டு நிதியில் புதுப்பிக்கும் பணி துவங்கியுள்ளது. மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடையினருக்கும் கடைகள் அமைத்து தரப்படும். மார்க்கெட் அருகே 9 மீட்டர் ரோடு பகுதியில் உள்ள கடையினர், தங்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது என்று கூறினர். அவர்களுக்கும் ஆலோசனை செய்து உதவிகள் செய்ய முயற்சி செய்து கொண்டுள்ளோம். பஸ் ஸ்டாண்ட் கடை வியாபாரிகள், அவர்களது வியாபாரம் பாதிக்கும் என கூறியுள்ளனர். அவர்கள் சங்கம் சார்பில் கலந்து ஆலோசனை செய்து முடிவினை சொல்வதாக கூறியுள்ளனர். அதன்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself