நல்லாம்பாளையம் ஏரியில் மீன் வளர்ப்புக்கு எதிர்ப்பு: தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை

நல்லாம்பாளையம் ஏரியில் மீன் வளர்ப்புக்கு எதிர்ப்பு: தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை
X

குமாரபாளையம் தாலுககா அலுவலகத்தில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை.

நல்லாம்பாளையம் கிராம ஏரியில் மீன் வளர்ப்பது தொடர்பாக குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே தட்டான் குட்டை ஊராட்சிக்குட்பட்ட நல்லாம்பாளையம் கிராமத்தில் உள்ள ஏரியில் மீன் வளர்க்க முதன்முறையாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்பட்டது.

இதில் சண்முகம், சாமிநாதன் தரப்பினர் ஏலம் எடுத்தனர். இந்த ஏரியின் அருகில் உள்ள முனிராஜா, தமிழ்செல்வி தரப்பினர் ஏரியில் மீன் வளர்த்தால், அதில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் தங்கள் விவசாய நிலம் பாதிக்கப்படும் என கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால் ஏற்படும் சட்டம், ஒழுங்கு பிரச்சனையை சமாதான பேச்சுவார்த்தை மூலமாக தீர்த்து வைக்க தாலுகா அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவகுமார் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் ரவி, வி.ஏ.ஒ. முருகன், தியாகராஜன், மற்றும் சம்பந்தப்பட்ட இரு தரப்பினர் பங்கேற்றனர்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், இந்த பேச்சுவார்த்தை தீபாவளி பண்டிகை முடிந்து வைத்துக்கொள்ளலாம் என்று தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

Tags

Next Story