குமாரபாளையம் அருகே பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு

குமாரபாளையம் அருகே பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு
X
பன்னீர்செல்வம் தலைமையில் ஆயிரம் அஞ்சல் அட்டைகள் அனுப்பும் அந்தந்த பகுதி அஞ்சல் நிலையத்தில் நடைபெற்றது

குமாரபாளையம் அருகே பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட பலர் ஆய்வு செய்தனர். அந்த பகுதி விவசாய நிலங்கள் வீணாகும் என்பதால், இந்திய ஒருங்கிணைந்த உழவர் கூட்டமைப்பு சார்பில் அதன் அமைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் ஆயிரம் அஞ்சல் அட்டைகள் அனுப்பும் அந்தந்த பகுதி அஞ்சல் நிலையத்தில் நிகழ்வினை நடத்தினர்.

இது பற்றி, பன்னீர்செல்வம் கூறியதாவது: பல்லக்காபாளையம் பகுதியில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் அந்த பகுதியில் உள்ள பெதக்காட்டூர் , குட்டிகினத்தூர், பூசாரிகாடு, மேட்டுக்கடை, அருவங்காடு, செங்கமாமமுனியப்பன்கோவில் உள்ளிட்ட பகுதி விவசாய நிலங்கள் சீர்கெடும். எனவே இங்கு பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆயிரம் அஞ்சல் அட்டைகள் முதல்வருக்கு அனுப்பினோம் என்று அவர் கூறினார்.

Tags

Next Story