பள்ளிபாளையம் அருகே அலமேடு பகுதியில் புதிதாக வாரச்சந்தை துவக்கம்
பள்ளிபாளையம் அருகே அலமேடு பகுதியில் வாரச்சந்தை துவக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அலமேடு பகுதியில் வாரச்சந்தை திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பள்ளிபாளையம் ஒன்றியம் ஆலாம்பாளையம் பேரூராட்சி 8-வது வார்டு ,அலமேடு மாரியம்மன் கோவில் பின்புறம் புதிதாக வாரச்சந்தை நேற்று மாலை திறக்கப்பட்டது. துவக்க விழா நிகழ்ச்சியானது 8-வது வார்டு காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் சதீஷ் தனகோபால் தலைமையில் நடைபெற்றது. ஆலாம்பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் .தனகோபால், முன்னாள் துணை தலைவர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சௌந்தர்யா ஆட்டோ சிவக்குமார் வரவேற்புரையாற்றினார் .
வாரச்சந்தையை ஆலாம்பாளையம் பேரூராட்சி தலைவர் சகுந்தலா திறந்து வைத்தார்.முதல் விற்பனையை ஆலாம்பாளையம் தி.மு.க பேரூர் செயலாளர் கார்த்திக் ராஜா துவக்கி வைத்தார். அலமேடு சுற்று வட்டாரப் பகுதி கிராமப்புற பகுதி என்பதால்,தினந்தோறும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க,சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, ஆவரங்காடு சனி சந்தை மற்றும் அக்ரஹாரம் புதன் சந்தை பகுதிக்கு சென்று வந்த நிலையில் தற்போது வீட்டின் அருகிலேயே சந்தை அமைத்திருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..
சந்தை துவக்கப்பட்ட முதல் நாளிலே,குடும்பத்துடன் குழந்தைகளுடன் உற்சாகமாக ஏராளமானோர் சந்தைக்கு வருகை தந்தனர் .மேலும் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை காலை முதல் இரவு வரை சந்தை கூடும் எனவும், வாராந்திர சந்தைக்கு தேவையான அடிப்படை வசதிகள் படிப்படியாக செய்து தரப்படும் என சந்தை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu