குமாரபாளையம்; நீர் மோர் பந்தல் திறப்பு

குமாரபாளையம்; நீர் மோர் பந்தல் திறப்பு
X

குமாரபாளையம் முன்னாள் நகராட்சி தலைவர் தனசேகரன் தலைமையில், அவரது புதல்வி ஹர்சினி நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார். 

குமாரபாளையம் முன்னாள் நகராட்சி தலைவர் தலைமையில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

குமாரபாளையம் முன்னாள் நகராட்சி தலைவர் தலைமையில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

குமாரபாளையம் தம்மண்ணன் வீதி, பெரிய மாரியம்மன் கோவில் முன்பாக, கோடை வெப்பத்தை தணிக்கும் விதமாக, பெரிய மாரியம்மன் நற்பணி மன்றம் சார்பில் முடிவு செய்யப்பட்டு, நீர் மோர் பந்தல் அமைத்து, அதன் திறப்பு விழா, முன்னாள் நகராட்சி தலைவர் தனசேகரன் தலைமையில் நடந்தது.

கோவில் திருவிளக்கு வழிபாட்டு குழு நிர்வாகியும், முன்னாள் நகராட்சி தலைவர் புதல்வியுமான ஹர்ஷினி, நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் பங்கேற்ற பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி, அன்னாசிப்பழம், இளநீர், பனை நுங்கு ஆகியன வழங்கப்பட்டன. பெரிய மாரியம்மன் மன்ற தலைவர் மணிகண்டன், செயலர் கேசவராஜ், முன்னாள் கவுன்சிலர் முருகேசன், நிர்வாகிகள் முருகேசன், யுவராஜ்,சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

Next Story
ai solutions for small business