/* */

நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்..!

குமாரபாளையம் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பைகள் 62 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பைகள்  பறிமுதல்..!
X

குமாரபாளையம் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

குமாரபாளையம் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பைகள் 62 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது..

குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் குமரன், மாவட்ட மாசுக்கட்டுபாட்டு பொறியாளர் மணிவண்ணன் உத்திரவின் பேரில் நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யும் பணி மூன்று நாட்களாக நடந்தது. குமாரபாளையம் நகரில் உள்ள ஓட்டல்கள், பூக்கடைகள், பேக்கரிகள், பழக்கடைகள், மொத்த வர்த்தக கடைகள், சாலையோர கடைகள், வர்த்தக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், ஒரு முறை பயன்படுத்தப்படும் டம்ளர்கள், மற்றும் பிற பொருட்கள் 62 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களுக்கு 13 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் சுகாதார ஆய்வர்கள் சந்தானகிருஷ்ணன், ஜான் ராஜா, துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையம் நகராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் ஓ.ஆர்.எஸ். கரைசல் எனும் நீர்சத்து அதிகரிக்கும் பானம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.


இது குறித்து குமாரபாளையம் நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி கூறியதாவது:

கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வியர்வை மூலம் உடலில் உள்ள நீர் அதிகம் வெளியேறி வருவதால் மிகவும் சோர்வாகி விடுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு உடலில் நீர் சத்து குறைபாடு ஏற்பட்டு, பல நோய்களுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் விதமாக, குமாரபாளையம் நகராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் ஓ.ஆர்.எஸ். கரைசல் எனும் நீர்சத்து அதிகரிக்கும் பானம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இது உப்பு மற்றும் சர்க்கரை கலந்த கரைசல் ஆகும். இந்த கரைசல் குடித்து வந்தால், உடலில் நீர்ச்சத்து குறைபாடு இல்லாத நிலை ஏற்படும். நாமக்கல், சுகாதார பணிகள், துணை இயக்குனர் பூங்கொடி உத்திரவின் பேரில், எலந்தகுட்டை, அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் மனோகரன் தலைமையில், குமாரபாளையம் நகரில் பஸ் ஸ்டாண்ட், கவுரி தியேட்டர் பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வழங்கப்படுகிறது. பகல் 11:00 மணி முதல் மாலை 04:00 வரையிலான நேரம் தான் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால், அந்த நேரத்தில் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த ஓ.ஆர்.எஸ். கரைசலை பருகி, நீர்சத்து குறைபாட்டினை போக்கி கொள்ள வேண்டுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், பிரபுகுமார், குமாரபாளையம் சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, எஸ்.ஐ. ஜான்ராஜா, சந்தானகிருஷ்ணன் உள்பட பலரும் பங்கேற்றனர்.

Updated On: 24 May 2024 2:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. உலகம்
    இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
  3. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அ.தி.மு.க.விற்கு தாவிய பா.ஜ.க., தி.மு.க....
  5. தமிழ்நாடு
    ஜூன் 20 ம்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை ரத்து என தகவல்
  6. லைஃப்ஸ்டைல்
    மனித அறிவாற்றல் அதிகரிக்க ஐந்து அடிப்படை வழிமுறைகள் பற்றி...
  7. லைஃப்ஸ்டைல்
    போலி சமையல் எண்ணெயை கண்டறிவது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    அடேங்கப்பா...! ஊற வைத்த வேர்க்கடலையில் இத்தனை மகத்துவமான விஷயங்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    பெயர் சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறச் செய்யும் பச்சை மாங்காய் - அதுல...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அருகே சீராத்தோப்பு முத்து நகர் பகுதியில் மரம் நடும் விழா