கார், டூவீலர் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்

கார், டூவீலர் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்
X
குமாரபாளையம் அருகே கார், டூவீலர் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.

குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை எஸ்.எஸ்.எம்.பொறியியல் கல்லூரி அருகே நேற்றுமுன்தினம் மாலை 06:30 மணியளவில் டி.வி.எஸ். 50 வாகனத்தில் பெயர், ஊர், விலாசம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க நபர் குமாரபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் வேகமாக வந்த சான்ட்ரா கார் மோதியதில், டூவீலர் ஓட்டுனர் படுகாயமடைந்தார். மயக்கத்துடன் சுய நினைவு இல்லாத நிலையில் இருப்பதால், அவரிடம் எந்த விபரமும் போலீசாரால் கேட்க முடியாத நிலை இருந்து வருகிறது. காரை விட்டுவிட்டு காணாமல் போன கார் ஓட்டுனர் குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்