/* */

ஆடு திருடியதாக கும்பல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு; 4 பேர் கைது

பள்ளிபாளையம் அருகே ஆடு திருட்டில் ஈடுபட்டதாக கூறி கும்பல் தாக்கியதில் ஒருவர் பலியானார். 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

ஆடு திருடியதாக கும்பல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு; 4 பேர் கைது
X

ஆடு திருடியதாக கும்பல் தாக்கியதால் ஒருவர் உயிரிழந்த நிலையில், 4 பேர் கைது செய்யப்பட்டனர். ( மாதிரி படம்)

பள்ளிபாளையம் அருகே ஆடு திருட்டில் ஈடுபட்டதாக கூறி ஒரு கும்பல் ஒன்று சேர்ந்து சகோதரர்கள் இருவரை தாக்கியதில் ஒருவர் பலியானார். 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். பள்ளிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

பள்ளிபாளையம் அருகே உள்ள மோளகவுண்டன்பாளையம் கிராமத்தில் விவசாயிகள் வளர்த்து வரும் ஆடுகள் தொடர்ந்து காணாமல் போய் வருகிறது. இது குறித்து பள்ளிபாளையம் போலீசில் புகார் தெரிவித்தால், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவதில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள், இரவு நேரங்களில் கும்பலாக கிராமத்தை பாதுகாப்பதற்காக வலம் வந்தபடி இருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன், தினம் இரவில், இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்களை ஆடு திருடர்கள் என நினைத்த கிராமத்து இளைஞர்கள் 10க்கும் மேற்பட்டோர், அவர்களை சூழ்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் இருவரும் மயக்கம் அடைந்த நிலையில், பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரையும் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் இளைஞர்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட போது, இளைஞர்கள் இருவரும் பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவத்திபாளையத்தை சேர்ந்தவர்கள் என்றும், இருவரும் அண்ணன் தம்பி என்றும், அண்ணன் ராஜ்குமார், தம்பி கார்த்தியும் தனது நண்பர்களை சந்திப்பதற்காக இரவு 10 மணிக்கு மோளக்கவுண்டம்பாளையம் வந்தது தெரிய வந்தது. இரண்டு இளைஞர்களையும் தவறாக நினைத்த கிராம மக்கள் பலமாக தாக்கியதில் இருவருக்கும் கைகளில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டதுடன், உடல்நிலை பெருமளவு பாதிக்கப்பட்டு இருந்தது. இதில் சிகிச்சை பலனின்றி அண்ணன் ராஜ்குமார் நேற்று இரவு உயிரிழந்தார்.

இதன் காரணமாக போலீசார் மோளகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த 14 இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களில் நாகராஜ், 24, குமரேசன், 23, கந்தசாமி, 25, மற்றும் செங்கோட்ட பூபதி, 24 நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கும்பலாக சேர்ந்து இளைஞர்களை திருடர்கள் என்று தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 10 Jun 2024 6:15 AM GMT

Related News

Latest News

 1. கலசப்பாக்கம்
  அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை 2-ம் கட்ட...
 2. நாமக்கல்
  விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கொமதேக...
 3. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜூன்.18) மின்தடை அறிவிப்பு
 4. திருவண்ணாமலை
  டேட்டா ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
 5. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை; காய்கறி மற்றும் பழங்கள் இன்றைய விலை
 6. திருவண்ணாமலை
  திருவண்ணாமலையில் ஆனி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
 7. ஆன்மீகம்
  Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
 8. உலகம்
  இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
 9. இந்தியா
  ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை
 10. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் அ.தி.மு.க.விற்கு தாவிய பா.ஜ.க., தி.மு.க....