குமாரபாளையம் அருகே பார் தகராறில் பாட்டிலால் தாக்கியதில் ஒருவர் காயம்

குமாரபாளையம் அருகே பார் தகராறில்  பாட்டிலால் தாக்கியதில் ஒருவர் காயம்
X

குமார பாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையம் அருகே பாருக்கு வெளியில் பாட்டிலால் தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்தார்.

குமாரபாளையம் கொத்துக்காரன்காடு பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 38,). ஓட்டுனர். அதே பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்( 46,). மூட்டை தூக்கும் தொழிலாளி. இருவரும் நண்பர்கள். நேற்றுமுன்தினம் மாலை 03:00 மணியளவில் கே.ஓ.என்.தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள பாரின் வெளியில் மது குடித்துக்கொண்டிருந்த போது, இருவருக்கும் தங்களது சாதி குறித்து வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாதேஸ், தனசேகரன் தலையில் மது பாட்டிலால் தாக்கியதில் பலத்த காயமடைந்து, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். குமாரபாளையம் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மாதேஷை கைது செய்தனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு