மண் புழு உரம் தயாரித்தல் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம்
குமாரபாளையம் அருகே வேளாண்மைத்துறை சார்பில் மண் புழு உரம் தயாரித்தல் பற்றி ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
மண் புழு உரம் தயாரித்தல் பற்றி ஒரு நாள் பயிற்சி முகாம்
குமாரபாளையம் அருகே வேளாண்மைத்துறை சார்பில் மண் புழு உரம் தயாரித்தல் பற்றி ஒரு நாள் பயிற்சி நடந்தது.
வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் கிராமத்தில் விவசாயிகளுக்கு மண் புழு உரம் தயாரித்தல் பற்றி ஒரு நாள் பயிற்சி முகாம், வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயமணி தலைமையில் நடந்தது. இவர் பேசியதாவது:
பள்ளிபாளையம் வட்டார விவசாயிகளுக்கு நெல் ஏ.டி.டி.54, சோளம் சி.எஸ்.வி.31,சான்று பெற்ற விதைகள் மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தேவைப்படும் விவசாயிகள் ஆதார் அட்டை, பட்டா, சிட்டா நகல் எடுத்து வந்து இடுபொருட்களை பெற்று கொண்டு, பணத்தை இணைய வழியில் செலுத்த வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.
செங்கோ இயற்கை விவசாயி நல்லசிவம் பங்கேற்று, மண்புழு உரம் தயாரிக்க உகந்த மண்புழுக்களை தேர்வு செய்வதற்கு வேண்டிய குணாதிசயங்கள்,மண்புழு உரங்கள், மண்புழு உரம் தயாரிக்க உகந்த கழிவுகள், மண்புழு உர உற்பத்திக்கான இடம், மண்புழு உர உற்பத்திக்கான படுக்கை, கழிவுகளை படுக்கையில் போடும்முறை, தண்ணீர் தெளிக்கும் முறை, மண்புழு உரத்தினை ஊட்டமேற்றுதல், மண் புழு உர அறுவடை முறை, மண்புழு உரத்தின் நன்மைகள், பஞ்சகாவியன், தேமோர் கரைசல், மீன் அமிலம் தயாரிக்கும் முறைகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்.
துணை வேளாண்மை அலுவலர் மாயாஜோதி பங்கேற்று, மண் புழு வளர்ப்பு, பயிர்காப்பீடு, பிரதம மந்திரி கெளரவ நிதி பெறுவது பற்றி விவசாயிகளுக்கு கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் நிஷா பங்கேற்று, உழவன் செயலியில் தமிழ் மண் வளம்,மானிய திட்டங்கள், பயிர் காப்பீடு விபரம், உழவன் அலுவலர் தொடர்பு திட்டம், பூச்சி,நோய்கண்காணிப்பு, பரிந்துரை, அட்மா பயிற்சிகள் மற்றும் செயல்விளக்கம், கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டம் போன்ற 24 விருப்ப தேர்வுகள் உள்ளது எனவும், அதனை உபயோகிக்கும் முறைகள், நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு கூறினார்.
வட்டார தொழில்நுட்ப அலுவலர் கிருபா பங்கேற்று அட்மா திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பயிற்சிகள்,செயல்விளக்கங்கள், கண்டுணர் சுற்றுலாக்கள், பண்ணைப்பள்ளிகள் குறித்து விவசாயிகளுக்கு கூறினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் அருண்குமார் அவர்கள் இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu