குமாரபாளையத்தில் அடிதடி வழக்கில் ஒருவர் கைது

குமாரபாளையத்தில் அடிதடி வழக்கில் ஒருவர் கைது
X

மாதிரி படம்.

குமாரபாளையத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஏற்பட்ட அடிதடி வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையம், சடையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் தமிழ்மணி,36, பிரபு, 35. கூலித்தொழிலாளர்கள். இருவருக்குமிடையே பணம் கொடுக்கல், வாங்கல் தகறாரறு அடிக்கடி ஏற்படுவது வழக்கம் என கூறப்படுகிறது. ராஜம் தியேட்டர் அருகே உள்ள டீக்கடை முன்பு நேற்று மாலை 4 மணியளவில் இருவருக்கும் வாய்த்தகராறில் ஆரம்பித்து, முடிவில் அடிதடியில் நிறைவு பெற்றது. இதுகுறித்து பிரபு குமாரபாளையம் போலீசில் புகார் செய்ய, தமிழ்மணி மீது வழக்குப்பதிவு செய்து அவனை கைது செய்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!