சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
பைல் படம்
பிரதோஷ நாளையொட்டி குமாரபாளையம் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
பிரதோஷம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோஷ காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோஷ வழிபாடு எனவும், பிரதோஷ தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோஷ விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது.
பிரதோஷ நாளையொட்டி கலைமகள் வீதி கற்பக விநாயகர் கோவில், குமாரபாளையம் அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், கோட்டைமேடு கைலாசநாதர் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில், அங்காளம்மன் கோவில் சவுண்டம்மன் கோவில்கள், கள்ளிபாளையம் சிவன் கோவில், தேவூர் ஆத்மலிங்கேஸ்வரர் கோவில், உள்ளிட்ட பல கோவில்களில் சுவாமிக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu