கொடை வள்ளல் ஜே கே கே நடராஜா நினைவு இயக்கம் சார்பாக 48 பேருக்கு லேசர் முறையில் இலவச கண் புரை சிகிச்சை
கொடை வள்ளல் ஜே கே கே நடராஜா நினைவு இயக்கம் சார்பாக JKKNS.ஓம்சரவணா LLB., அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மாபெரும் இலவச பலதுறை மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பரிசோதனை செய்து கொண்ட தகுதியான நபர்களுக்கு கண்புரை லேசர் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டது.
நிகழ்வின் தலைப்பு : லேசர் முறையில் கண் அறுவை சிகிச்சை
நிகழ்வு நடைபெற்ற இடம் : தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை
நிகழ்வு நடைபெற்ற நேரம் : காலை 10 மணி
நிகழ்வு நடைபெற்ற நாள் : டிசம்பர் 13, 2023
கண் அறுவை சிகிச்சை முகாம் (The Eye foundation Erode )
கொடை வள்ளல் ஜே கே கே நடராஜா நினைவு இயக்கம் சார்பாக JKKNS.ஓம்சரவணா LLB., அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மாபெரும் இலவச பலதுறை மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம், டிசம்பர் 7ம் தேதி குமாரபாளையம் ஸ்ரீராமர் திருக்கோயில் மண்டபத்தில் நடைபெற்றது. கடந்த வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 1 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் பொதுமக்கள் பலர் திரளாக கலந்துகொண்டு பலனடைந்தனர்.
முகாமிற்கு வந்தவர்களுக்கு ஜே கே கே ரங்கம்மாள் அறக்கட்டளை மற்றும் தி ஐ பவுண்டேஷன் சார்பாக இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் தகுதியான நபர்களுக்கு உயர்தர இலவச கண் கண்ணாடியும் வழங்கப்பட்டு, கண்புரை காரணமாக இலவச கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரையும் செய்யப்பட்டது. அந்த வகையில், 48 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தகுதியானவர்களாக கண்டறியப்பட்டனர்.
கண்புரை உள்ள பொதுமக்களுக்கு, 15 ஆயிரம் மதிப்புள்ள உயர்தரமான லென்ஸ் மற்றும் கண் அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவை முற்றிலுமாக நம் JKKNS ஓம்சரவணா அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
கண் அறுவை சிகிச்சை லேசர் முறையில் நடைபெற்றது. கண் அறுவை சிகிச்சைக்கு தகுதி வாய்ந்தவர்கள் என கண்டறியப்பட்ட அனைவரும் தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனைக்கு நேற்று அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது JKKNS ஓம் சரவணா அவர்களும் மருத்துவமனைக்கு வந்து அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளவர்களுடன் பேசி அவர்களுக்கு வேண்டியவற்றை செய்து கொடுத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu