குமாரபாளையத்தில் செவிலியர்களுக்கு மரியாதை செய்த ரோட்டரி சங்கம்

குமாரபாளையத்தில்  செவிலியர்களுக்கு மரியாதை செய்த ரோட்டரி சங்கம்
X

 குமாரபாளையம் ரோட்டரி சங்கம் சார்பில் செவிலியர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.

குமாரபாளையம் ரோட்டரி சங்கம் சார்பில் செவிலியர்களுக்கு மரியாதை செலுத்தும் விழா நடைபெற்றது.

ஆண்டுதோறும் செவிலியர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்வு ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெறுவது வழக்கம். தற்போது 2021ம் ஆண்டிற்கான விழா சங்க தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய குமாரபாளையம், ஜி.ஹெச், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வரும் செவிலியர்கள் 65 பேர்களுக்கு தனியார் கல்லூரி நிர்வாகி நடேசன், பொதுநல ஆர்வலர் ரமேஷ்பாபு, வட்டார மருத்துவ அலுவலர் ரேவதி, சங்க நிர்வாக பொறுப்பாளர் சிவசுந்தரம் உள்ளிட்ட பலர் சால்வை அணிவித்தும், மலர்கொத்து மற்றும் நினைவுப்பரிசு வழங்கியும் பாராட்டினர்.

செவிலியர்கள் கூறியதாவது;

கொரோனா காலத்தில் எங்கள் குடும்பத்தை பற்றி கூட கவலை படாமல் பணியாற்றினோம். எங்கள் உழைப்பை அங்கீகரித்து இது போல் மரியாதை வழங்குவது மகிழ்ச்சியாக உள்ளது.

பொதுமக்களுக்கு சேவை செய்யத்தான் இந்த பணியில் சேர்ந்தோம். எப்படிப்பட்ட தொற்று நோய் வந்தாலும் எங்கள் பணியில் பின்வாங்க மாட்டோம். இவ்வாறு கூறினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் தரணிதரன்,சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story