தி. மு. க. சார்பில் உதயநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம்
படவிளக்கம்:
குமாரபாளையம் தி. மு. க. சார்பில் நடந்த துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி பேசினார்.
தி. மு. க. சார்பில் உதயநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் - குமாரபாளையம் தி. மு. க. சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது.
குமாரபாளையம் தி. மு. க. சார்பில் துணை முதல்வர் உதயநிதி
பிறந்தநாள் பொதுக்கூட்டம் நகராட்சி தலைவர் மற்றும் வடக்கு நகர பொறுப்பாளர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு பேச்சாளராக திண்டுக்கல் லியோனி பேசினார். இவர் பேசியதாவது:
தமிழக மக்கள் சந்தோஷகமாக வாழ காரணம் தி. மு. க. வின் முதல்வர் ஸ்டாலினின் ஆட்சிதான். ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை உதய் திட்டதில் கையொப்பம் போடவில்லை. ஆனால் ஆவருக்கு பின் வந்த அ. தி. மு. க. ஆட்சியில் கையொப்பம் போட்டதுதான் மின் கட்டண உயர்வுக்கு காரணம். மக்களை ஏமாற்றும் விதத்தில் சேலை கொடுப்பது, தட்டு கொடுப்பது ஆகியவற்றை அ. தி.மு. க. வினர் செய்து வந்தனர். இவையெல்லாம் தற்காலிகம் தான். ஆனால் நிரந்தரமாக பெண்களுக்கு உதவும் வகையில் மாதம் தோறும் உரிமை தொகையாக ஆயிரம் கொடுத்தவர் இன்றைய முதல்வர் ஸ்டாலின். பெண்களை படுக்க வைக்க பெற்றவர்கள் சீராமபட்டு வந்தனர். ஆனால் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு கூட மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து, பெண்கள் கல்வி பயில உதவி வருபவர் ஸ்டாலின். விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகள் படைது வருபவர் உதயநிதி. விஜய் என்று பெயர் வைத்தவர் எல்லாம் வெற்றி பெற முடியாது. தி. மு. க. வை யாராலும் வெற்றி பெற முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட செயலர் மதுரா செந்தில், தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன், நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், மாவட்ட பொருளர் ராஜாராம், உள்பட பலர் பங்கேற்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu