குமாரபாளையத்தில் செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் செங்குந்த மகாஜன சங்கம் சார்பில்  பொங்கல் விழா கொண்டாட்டம்
X

குமாரபாளையம் செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் பொங்கல் விழா நடந்தது.

குமாரபாளையம் செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழ் பழமொழி. அறுவடை திருவிழா என அழைக்கப்படும் பொங்கல் திருவிழா தமிழகத்தில் இந்த ஆண்டு இன்று மூன்றாவது நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.நாளை காணும் பொங்கலுடன் பொங்கல் திருவிழா நிறைவு பெறும்.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் பொங்கல் விழா மற்றும் சங்கக் கொடியேற்று விழா, மாவட்ட செயலாளர் சீனிவாசன், நகர தலைவர் தங்கராஜ் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநில தலைவர் செல்வராஜ் பங்கேற்று வாழ்த்தி பேசினார்.

இந்த விழாவில் அவர் பேசியதாவது:-

பெரும்பாலான ஊர்களில் சங்க இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். சங்கத்தின் சார்பில் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட சேவைகள் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பயன்பெற வைக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் வழங்குவது போல், நெசவாளர்களுக்கும் சிறு தொழில் தொடங்க வங்கி சார்பில் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இதனை நெசவாளர்கள் பயன்படுத்தி ஜவுளி உற்பத்தியை மேம்படுத்தி, தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ராஜேஸ்வரி மண்டபம், பேருந்து நிலையம், சி.நா.பாளையம், சுந்தரம் காலனி உள்ளிட்ட 14 இடங்களில் செங்குந்த மகாஜன சங்கக்கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு பொங்கல், கரும்புகள் வழங்கப்பட்டன. நாமக்கல் மாவட்ட செங்குந்த மகாஜன சங்க தலைவர் மதிவாணன், ஈரோடு மாவட்ட தலைவர் நந்தகோபால், சித்தலிங்கம், வேலுச்சாமி, கணேசன், அருண்குமார், பிரபு உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!