குமாரபாளையத்தில் அரிமா சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

குமாரபாளையத்தில் அரிமா சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
குமாரபாளையத்தில் அரிமா சங்கத்தின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
டெக்ஸ்சிட்டி அரிமா சங்கம் மற்றும் குமாரபாளையம் அரிமா சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் குமாரபாளையத்தில் சங்க தலைவர்கள் தனபால், குமாரராஜா தலைமையில் நடந்தது. ஈரோடு அரசன் கண் மருத்துவமனை டாக்டர் ராம்பிரியா குழுவினர் பங்கேற்று, பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றதுடன், ஐ.ஓ.எல். பொருத்தும் கண் அறுவை சிகிச்சைக்கு 69 பேர் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகிகள் விஸ்வநாதன், பிரபு, அண்ணாமலை, நாராயணசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையம் லயன்ஸ் சங்கத்தார் சார்பில் ஆளுநர் வருகையையொட்டி, பன்னாட்டு லயன்ஸ் சங்க சேவைத்திட்டங்களான புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி, அரசு பள்ளிகளுக்கு நூலகம் அமைத்தல், தேனீ வளர்ப்பு, மரக்கன்று நடுதல் ஆகியன செயல்படுத்தப்பட்டன. சங்க தலைவர் குமார்ராஜா தலைமை வகித்தார். மாவட்ட ஆளுநர் தமிழ்மணி பங்கேற்று, பேரணியை துவக்கி வைத்து, பல்லக்காபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 600 புத்தங்கங்கள் வழங்கி நூலகம் திறந்து வைத்து, பள்ளி வளாகத்தில் 25 மரக்கன்றுகள் நட்டு வைத்து, முன்னாள் தமிழ் ஆசிரியர் பெரியசாமி தோட்டத்தில் தேனீ வளர்ப்பு பெட்டிகள் ஐந்திணை வைத்து, சேவைப்பணிகளை துவக்கி வைத்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகன், லயன்ஸ் அமைச்சரவை செயலர் தில்லை நடராஜன், கூட்டு மாவட்ட ஜி.எஸ்.டி. ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் பங்கேற்று, மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகைகள், ஆதரவற்றோர் மையங்களுக்கு அரிசி மூட்டைகள் வழங்கினர். செயலர் அண்ணாமலை, பொருளர் நாராயணசாமி, பள்ளியின் பி.டி.ஏ. நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu