விடியல் ஆரம்பம் சார்பில் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா

விடியல் ஆரம்பம் சார்பில்   சுபாஷ் சந்திரபோஸ்  பிறந்த நாள் விழா
X

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் தினவிழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் தினவிழா அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. போஸ் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி, வினாடி வினா உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு புத்தகங்களை இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர் சித்ரா பரிசாக வழங்கினார்.

மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் முக கவசம் கிருமிநாசினி வழங்கப்பட்டது. ஆசிரியை சுமதி, இசை அமைப்பாளர் மணி கிருஷ்ணா, தீனா, உதவிக்கரம் அங்கப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story