வைரத்திற்கு வாக்கு: சுயேச்சையாக ஓம்சரவணா பிரச்சாரம்

வைரத்திற்கு வாக்கு: சுயேச்சையாக ஓம்சரவணா பிரச்சாரம்
X
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக வைரம் சின்னத்தில் போட்டியிடும் ஓம் சரவணா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஜே கே கே நடராஜா கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குனராக இருந்து வரும் ஓம் சரவணா தனது பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் பொறுப்பினை ராஜினாமா செய்துவிட்டு, குமாரபாளையம் பகுதி மக்களுக்காக சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்து வேட்புமனு தாக்கல் செய்தார்.


அதைத் தொடர்ந்து வாக்காளர்களிடம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே தேர்தல் ஆணையம் சார்பில் அவருக்கு நேற்று வைரம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து தனது சின்னமான வைரத்தை வாக்காளர் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி பிரச்சாரம் செய்கிறார் வேட்பாளர் ஓம் சரவணா.

நேற்று காலை எம்ஜிஆர் நகர், அண்ணாநகர், குப்பாண்டாப்பாளையம், குள்ளநாயக்கன்பாளையம், ஜெ.ஜெ,நகர் பகுதிகளில் உள்ள பொதுமக்களை சந்தித்து தீவிரமாக வாக்குகள் சேகரித்தார்.

அப்போது தனது சின்னமான வைரத்திற்கு வாக்களிக்கும்படி வேட்பாளர் ஓம் சரவணா கேட்டுக்கொண்டார். அப்போது அவர் வெற்றி பெற்றவுடன் சட்டமன்ற தொகுதி வளர்ச்சிக்காக செய்யக்கூடிய பணிகளை பற்றி இளைஞர்கள், பெரியவர்கள் அனைவருக்கும் எடுத்துரைத்தார். இது போன்று கிராமங்கள் தோறும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவருக்கு கிராம மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.



Tags

Next Story
the future of ai in healthcare