குமாரபாளையத்தில் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் விற்ற முதியவர் கைது

குமாரபாளையத்தில் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் விற்ற முதியவர் கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம் (பைல் படம்)

குமாரபாளையத்தில் சைல்டு லைன் அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கூல் லிப் விற்பனையாளர் கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையம் அபெக்ஸ் காலனியில் வசிப்பவர் சவுண்டேஸ்வரி (வயது 35.) நாமக்கல் குழந்தைகள் அலகில் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலராக பணியாற்றி வருகிறார். மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் ஒவ்வொரு பள்ளியாக விண்ணைத்தொடு என்ற தலைப்பில் மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்தி வருகிறார். நேற்று குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்த போது, மாணவர்களை குறி வைத்து ஒரு வித போதை பொருளான கூல் லிப் என்ற பொருள் விற்பனை செய்யப்படுவதை அறிந்தார். இது பற்றி விசாரித்து, காவேரி நகரில் உள்ள ஒரு கடையில் விற்பனை செய்யப்படுவதாக அறிந்து, போலீஸ் எஸ்.ஐ. மலர்விழியுடன் சென்று, அங்குள்ள பெட்டிக்கடை ஒன்றில் விற்பது அறிந்து அதன் உரிமையாளர் அதே பகுதியை சேர்ந்த சுந்தரம்,( 61,) என்பவரை கையும் களவுமாக பிடித்து, அவரிடமிருந்த ௯ கூல் லிப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து கைது செய்தனர். இது குறித்து சவுண்டேஸ்வரி கொடுத்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story
ai marketing future