தனியே வசித்து வந்த மூதாட்டி கொலை
தனியே வசித்து வந்த
மூதாட்டி கொலை
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள அக்ரஹாரம் பகுதியில் தனியே வசித்து வந்த 90 வயது சரஸ்வதி எனும் மூதாட்டி கொலை. மூக்கு, காதுப்பகுதி உள்ளிட்ட இடங்களில் ரத்த காயங்களுடன் சடலமாக மீட்பு. மூதாட்டி அணிந்திருந்த ஒரு பவுன் நகை மாயம். திருச்செங்கோடு டி.எஸ்.பி. மற்றும் நாமக்கல் மாவட்ட எஸ்.பி ஆகியோர் நேரில் விசாரணை செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள அக்ரஹாரம் பகுதியில் வசித்து வந்தவர் மூதாட்டி சரஸ்வதி வயது 90. இவருடைய கணவர் சீனிவாசன். சுமார் 20 ஆண்டுகளுக்கு காலமான நிலையில்,
சரஸ்வதியின் மகன்கள், மகள்கள் திருமணம் ஆகி பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்..மேலும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மூதாட்டி சரஸ்வதி தனக்கு சொந்தமான அக்ரஹாரம் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை சரஸ்வதிக்கு காலை உணவு வழங்குவதற்காக சரஸ்வதியின் பேரன் வெங்கடேசன் என்பவர் வீட்டின் கதவை தட்டி உள்ளார்.வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ் போடப்பட்ட நிலையில் கதவு திறக்கப்படாமல் இருந்ததால், சந்தேகம் அடைந்த வெங்கடேசன், வலது புறமாக இருந்த வீட்டில் மற்றொரு கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்த போது, மூக்கு காது உள்ளிட்ட இடங்களில் ரத்த காயங்களுடன் மூதாட்டி சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் மூதாட்டி சரஸ்வதி காதில் அணிந்திருந்த சுமார் ஒரு பவுன் தோடு மாயமானது தெரியவந்தது.. இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டி சரஸ்வதி சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு நாமக்கல் மாவட்ட எஸ்.பி ராஜேஷ் கண்ணன், திருச்செங்கோடு டிஎஸ்பி கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூதாட்டி சரஸ்வதி வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் அப்பகுதி சேர்ந்த இளைஞர்கள் சிலர் அவ்வப்போது மது அருந்துவது, அங்கேயே படுத்து உறங்குவது போன்ற செயல்பாடுகளை செய்து வருவதால் மூதாட்டி தனியே வசித்து வருவதை அறிந்து அவரிடம் இருந்து நகைகளை பறிக்கும் நோக்கத்தில் மூதாட்டியை கொலை செய்திருப்பார்களா? எனவும், அவர்களுக்கும் இந்த கொலை சம்பவத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? எனவும் பள்ளிபாளையம் போலீஸ் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
இந்த சம்பவமானது பள்ளிபாளையம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
படவிளக்கம் :
பள்ளிபாளையம் அடுத்துள்ள அக்ரஹாரம் பகுதியில் தனியே வசித்து வந்த 90 வயது சரஸ்வதி எனும் மூதாட்டி கொலை. மூக்கு, காதுப்பகுதி உள்ளிட்ட இடங்களில் ரத்த காயங்களுடன் சடலமாக மீட்பு.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu