குமாரபாளையத்தில் ஒலிபெருக்கி மூலம் அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை

குமாரபாளையத்தில் ஒலிபெருக்கி மூலம் அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை
X

குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

குமாரபாளையம் காவிரி கரையோரப்பகுதியில் வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை அதிகம் பெய்து வருவதால், கர்நாடக அணைகள் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகம் ஆன நிலையில் நேற்று மாலை முதல் அதிக அளவிலான தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் படிக்கட்டுக்கு மேலே ஏறிய நிலையில் தண்ணீர் சென்று கொண்டுள்ளது. அதனால் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இது குறித்து வருவாய்த்துறையினர் கூறியதாவது:

காவிரியில் அதிக நீர் வந்து கொண்டிருப்பதால் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் மேடான இடங்களுக்கு செல்ல வேண்டி கூறி வருகிறோம். மேலும் தங்குவதற்கு தேவையான இடங்களை தயார் நிலையில் வைத்துள்ளோம். நாங்களும், நகராட்சி பணியாளர்களும் தீவிர கரையோர ரோந்து பணி மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு கூறினார்கள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!