குமாரபாளையம் கோவில் நிலங்களை நவீன முறையில் அளவீடு செய்த அதிகாரிகள்

குமாரபாளையம் கோவில் நிலங்களை நவீன முறையில் அளவீடு செய்த அதிகாரிகள்
X

குமாரபாளையத்தில் கோவில் நிலங்களை நவீன முறையில் அளவீடு செய்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள்.

குமாரபாளையத்தில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் நிலங்களை நவீன முறையில் அளவீடு செய்தனர்.

தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை சார்பில் கோவில் நிலங்களை அளவீடு செய்ய உத்திரவிட்டதன் பேரில் அனைத்து பகுதியிலும் கோவில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு வருகிறது. இதன்படி குமாரபாளையம் கோட்டைமேடு கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலம் நவீன முறையில் அளவீடு செய்யப்பட்டது.

இது பற்றி செயல் அலுவலர் விஸ்வநாதன் கூறுகையில், குமாரபாளையம் கோட்டைமேடு கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலம் ரோவர் இயந்திரம் மூலம் நவீன முறையில் அளவீடு செய்யப்பட்டது. கோட்டைமேடு கைலாசநாதர் கோவில் நிலம் 22.87 ஏக்கர், லக்ஷ்மி நாராயண சுவாமி கோவில் நிலம் 23.92 ஏக்கர், தாமோதர சுவாமி கோவில் நிலம் 10 ஏக்கர், பத்ரகாளியம்மன் கோவில் நிலம் 12 ஏக்கர் அளவீடு செய்யப்படவுள்ளது.

இந்த அளவீடு ரோவர் முறையில் அளவீடு செய்வதால் பணி எளிமையாகவும், அதே நேரம் துல்லியமாகவும் உள்ளது. இந்த முதற்கட்ட பணி நிறைவு பெற்று சில நாட்களில் இரண்டாம் கட்ட அளவீடு பணி தொடரும் என அவர் கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!