மயானத்தில் கல்லறை இடித்த பிரச்சனையில் அதிகாரிகள் ஆய்வு

மயானத்தில் கல்லறை இடித்த பிரச்சனையில் அதிகாரிகள் ஆய்வு
X
குமாரபாளையம் அருகே மயானத்தில் கல்லறை இடித்த பிரச்சனையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மயானத்தில் கல்லறை இடித்த பிரச்சனையில் அதிகாரிகள் ஆய்வு

குமாரபாளையம் அருகே மயானத்தில் கல்லறை இடித்த பிரச்சனையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட மயானம், சேலம், கோவை புறவழிச்சாலை அருகே உள்ளது. இந்த இடத்தில் தனியார் தொண்டு நிறுவனத்தார் பூச்செடிகள், மரங்கள் வைக்க இருப்பதால், மயானம் முழுதும், பொக்லின் கொண்டு நிலத்தை சமன் படுத்தி, மரக்கன்றுகள் வைக்க குழிகளும் தோண்டினர். மேலும் குளத்துக்காடு என்ற பகுதியில் உள்ள தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட மயானத்தில் கல்லறைகள் மீது குப்பைகள் மலை போல் குவித்து வைத்துள்ளனர். இதற்கு, நடராஜா நகர் ஜெபமாலை மாதா பேராலய பங்கு தந்தை பெலவெந்திரம், செயலர் இன்னாசிமுத்து, பொருளர் வின்சென்ட், கல்லறை பொறுப்பாளர் இருதயராஜ் ஆகியோர், குமாரபாளையம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை செய்து, இரு தரப்பினரை சமாதானம் செய்து, கல்லறை இருந்த இடத்தில் குப்பை கொட்டக்கூடாது எனவும், கல்லறை இடிக்கப்பட்ட இடத்தில் எவ்வித பணிகளும் செய்யக்கூடாது எனவும் பேசி அனுப்பினர். இந்நிலையில் நேற்று பி.டி.ஒ. பிரபாகர் , மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சொக்கலிங்கம் மற்றும் பேராலய பொருளர் வின்சென்ட், கல்லறை பொறுப்பாளர் இருதயராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். இது குறித்து வின்சென்ட் கூறியதாவது: இந்த இடத்தில் எங்களுக்கு இடம் ஒதுக்கி தருமாறு கேட்டோம். நில அளவீடு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

படவிளக்கம் :

குமாரபாளையம் அருகே மயானத்தில் கல்லறை இடித்த பிரச்சனையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Next Story