ஒ.ஏ.பி. பெறுவோர் இறப்பை ஒ.ஏ.பி. அலுவலகத்தில் தெரிவிக்க நடவடிக்கை வேண்டும்

ஒ.ஏ.பி. பெறுவோர்  இறப்பை ஒ.ஏ.பி. அலுவலகத்தில்  தெரிவிக்க நடவடிக்கை வேண்டும்
X

குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம் ( பைல் படம்)

குமாரபாளையம் தாலுக்கா அளவில் ஒ.ஏ.பி. பெறுவோர் இறப்பை, ஒ.ஏ.பி. அலுவலகத்தில் உடனே தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

60 வயது நிறைந்த முதியோர் பலர் குமாரபாளையம் தாலுக்காவில் முதியோர் ஓய்வூதிய தொகை பெற்று வருகின்றனர். இவர்கள் நோய் தாக்கியோ, வயது முதிர்வின் காரணமாகவோ, சாலை விபத்திலோ இறக்க நேர்ந்தால் அவர்களது இறப்பை, அவரது குடும்பத்தார் நீண்ட நாட்கள், பல மாதங்கள், பல வருடங்கள் கழித்து கூட உள்ளாட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்கிறார்கள்.

இதனால் ஒ.ஏ.பி. வேண்டி விண்ணப்பித்து காத்திருப்பவர்கள் ஒ.ஏ.பி. பெற முடியாத நிலை ஏற்படுகிறது. மற்றவர்களும் பயன் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்களது குடும்பத்தார் ஒத்துழைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனை ஜி.ஹெச்.லிருந்து சிகிச்சைக்கு வருவோர் தகவலை உடனுடுக்குடன் போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவிப்பது போல், ஜி.எச்., மயானம், சாலை விபத்து மரணம் ஆகியவற்றில் இறப்பவர் தகவல் குறித்து போலீசார் உள்பட உடனுக்குடன் ஒ.ஏ.பி. அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story