பள்ளிபாளையத்தில் நாளை ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளிபாளையத்தில் நாளை ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி
X
குழந்தைகள் போட்டி, சமையல் போட்டி, கோலப்போட்டி மற்றும் இசை, நாடக பிரிவு சார்பாக கலை நிகழ்ச்சியும் நடைபெறும்.

ஊட்டச்சத்து மாதம், விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவம் மற்றும் கோவிட் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஆகியவை அடங்கிய ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு நிகழ்ச்சியை தர்மபுரி மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் பள்ளிபாளையம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் இணைந்து நாளை நடத்துகிறது.

பள்ளிபாளையம் நகராட்சி சமுதாயக் கூடத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நாமக்கல் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் மரு ஜே. பிரபாகரன் துவக்கி வைக்க உள்ளார்.‌ பள்ளிபாளையம் நகராட்சி ஆணையாளர் மா. ரவிசந்திரன் விழாவுக்கு தலைமை தாங்குகிறார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ். செந்தில் முன்னிலை வகைக்கிறார்.

மாவட்ட சமூக நல அலுவலர் பி. கே. கீதா, வட்டார மருத்துவ அலுவலர் கு. ரேவதி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) வெ. கோவிந்தன்,வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) நா. கிரிஜா, பள்ளிபாளையம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தெ. புனிதவதி, திருச்செங்கோடு குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கா. மோகனா ஆகியோரும் இந்த விழாவில் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சியில் ஆரோக்கியமான குழந்தைகள் போட்டி, சமையல் போட்டி, கோலப்போட்டி ஆகியவையும் ஒரு பகுதியாக நடத்தப்படும். மற்றும் இசை மற்றும் நாடக பிரிவு சார்பாக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!