குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் செவிலியர் தினவிழா கொண்டாட்டம்

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் செவிலியர் தினவிழா   கொண்டாட்டம்
X

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் செவிலியர் தினவிழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மருத்துவமனை சார்பில் செவிலியர் தினவிழா தலைமை டாக்டர் பாரதி தலைமையில் கொண்டாடப்பட்டது. செவிலியர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்த விழாவில் தலைமை டாக்டர் பாரதி பேசும்போது ஈன்றெடுத்த அன்னை அரவணைக்கும் முன்னே, பூத்திட்ட மழலையை மலராய் தாங்கி கொள்ளும் மண்ணுலக தேவதைகள் செவிலியர்கள். வெறுப்பது யாராக இருந்தாலும், நேசிப்பது நீங்களாக இருங்கள். தாய்க்கு சமமானவர்கள் செவிலியர்கள். தாயுள்ளமும், தியாக உள்ளமும் உடையவர்கள் செவிலியர்கள் என்றார். விழாவில் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்