குமாரபாளையத்தில் நாளுக்குநாள் அதிகரிக்கும் நாய் சிரங்கு; தலைமை மருத்துவர் தகவல்

குமாரபாளையத்தில் நாளுக்குநாள் அதிகரிக்கும் நாய் சிரங்கு;  தலைமை மருத்துவர் தகவல்
X

குமாரபாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாரதி.

குமாரபாளையத்தில் நாய் சிரங்கு நோயாளிகள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் நாய்களால் சிரங்கு நோயாளிகள் வருகை அதிகரித்துள்ளதாக அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாரதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தலைமை மருத்துவர் பாரதி கூறுகையில், குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. நாய்கள் கடித்ததாக கடந்த மாதம் 101 நோயாளிகள் சிகிச்சை பெற்று சென்றனர்.

இம்மாதம், நாய்க்கடி மற்றும் நாய்களால் ஏற்படும் சிரங்கு நோயால் பாதிக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். நாளுக்கு நாள் நாய்களால் ஏற்படும் நோய் பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

மழை மற்றும் குளிர் மாதம் காரணமாக இனி வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கக்கூடும். இதனை தடுக்க நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!