உயர் அழுத்த மின் கம்பிகள் அகற்றும் பணியால் பகல் நேர மின் விநியோகம் தடை

உயர் அழுத்த மின் கம்பிகள் அகற்றும் பணியால் பகல் நேர மின் விநியோகம் தடை
X

குமாரபாளையத்தில் உயர் அழுத்த மின் கம்பிகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

குமாரபாளையத்தில் உயர் அழுத்த மின் கம்பிகள் அகற்றும் பணியால் பகல் நேர மின் விநியோகம் தடைபட்டது.

தமிழகத்தில் முதன்முறையாக புதைவட மின் கம்பிகள் குமாரபாளையம் நகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டது. இரு ஆண்டுகளாக நடைபெற்ற பணிகள் முடிவு நிலையை எட்டியுள்ளது.

உயர் அழுத்த மின் கம்பிகள் உள்பட தற்போது மின் கம்பிகள் அனைத்தும் பூமிக்கு அடியில் செல்வதால், மேலே கம்பத்தில் உள்ள உயரழுத்த மின் கம்பிகள் அகற்றும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இதனால் நேற்று பகல் முழுதும் மின் விநியோகம் சேலம் சாலை உள்ளிட்ட பல பகுதியில் காலை 07:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை இல்லாத நிலை ஏற்பட்டது.

கடும் வெயில் வாட்டி எடுத்த நிலையில் மின் விநியோகம் இல்லாமல், வியாபாரிகள், பொதுமக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகினர். இதனால் இப்பகுதிக்குட்பட்ட ஜவுளி உற்பத்தி நிறுவனங்களில் ஜவுளி உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
ai marketing future