குமாரபாளையம் JKKN மருந்தியல் கல்லூரியில் என்.எஸ்.எஸ் முகாம்

குமாரபாளையம் JKKN  மருந்தியல் கல்லூரியில் என்.எஸ்.எஸ் முகாம்
X

ஜேகேகேஎன் கல்வி நிறுவன என்.எஸ்.எஸ்.முகாம் (மாதிரி படம்)

தி தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் ஜேகேகேஎன் மருந்தியல் கல்லூரி இணைந்து நடத்தும் என்.எஸ்.எஸ் முகாம் நடக்கவுள்ளது.

தி தமிழ்நாடு டாக்டர் எம். ஜி. ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் ஜே. கே. கே. என் மருந்தியல் கல்லூரி இணைந்து நடத்தும் நாட்டு நலப்பணித்திட்டம் (N.S.S) சிறப்பு முகாம் வருகிற 16.03.2022 புதன்கிழமை தொடங்கி 22.03.2022 செவ்வாய்கிழமை வரை தட்டாங்குட்டை கிராமத்தில் நடைபெற உள்ளது. இதில் மருந்தியல் பட்டபடிப்பு படிக்கும் மாணவ மாணவியர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதில் இலவச உடல் பரிசோதனை முகாம், பல் மருத்துவ முகாம், மகளிர் சுய வேலைவாய்ப்பு பற்றிய கருத்தரங்கு, கொரோனா பற்றிய விழிப்புணர்வு, தேசிய தடுப்பூசி தினம் அனுசரிப்பு, யோகக்கலை மற்றும் உடற்பயிற்சி, மரக்கன்று நடுதல், சமுதாயத்தில் மருந்தாளுனர்களின் பங்கு, மருந்துகளின் காலாவதிநிலை பற்றிய விளக்கம் மற்றும் மருந்துகள் எடுத்துகொள்ளும்முறை பற்றிய கருத்தரங்கம், வடிவமைப்பு சிந்தனை பற்றி விளக்கம் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. போட்டியில் பங்குகொள்ளும் பள்ளி குழந்தைகளை ஊக்கப்டுத்தும் விதமாக இனிப்புகளும், பரிசுகள் வழங்கப்படுகிறது.

Tags

Next Story
ai in future agriculture