மழை இல்லாததால் தீபாவளி வியாபாரம் படு ஜோர்! வியாபாரிகள் மகிழ்ச்சி
படவிளக்கம் :
குமாரபாளையம் காளியம்மன் கோவில் அருகில் உள்ள இனிப்பு பலகாரம் விற்கும் கடையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து இனிப்புகள் வாங்கி சென்றனர்.
மழை இல்லாததால் தீபாவளி வியாபாரம் படு ஜோர் சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சி
குமாரபாளையத்தில் மழை இல்லாததால் தீபாவளி வியாபாரம் படு ஜோராக நடந்ததால் சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
குமாரபாளையத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் கனமழை தொடங்கி, இரவு முழுதும் பெய்து வந்தது. இதனால் சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட பல வியாபாரிகள் தீபாவளி வியாபாரம் பாதிக்கப்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளாகினர். நேற்று மாலை மழை வரவில்லை என்பதால், பொதுமக்கள் துணிக்கடை, நகைக்கடை, பட்டாசு கடை, பலகாரக்கடைகள் மற்றும் சாலையோர கடைகளில் தங்களுக்கு வேண்டிய பொருட்கள் கூட்டம், கூட்டமாக வாங்கி சென்றனர். இதனால் சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட பல வியாபாரிகள் மிகுத்த மகிழ்ச்சியடைந்தனர். இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:
தீபாவளி வியாபாரம் என்பது இரு நாட்கள் மட்டுமே. கடந்த சில நாட்கள் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், முதலீடு செய்து பொருட்கள் வாங்கி வந்து, வியாபாரம் ஆகும் என்ற நம்பிக்கையில் இருந்த எங்களுக்கு மழையால் நம்பிக்கை இல்லாமல் போனது. இன்று (நேற்று) மழை இல்லாதது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இன்று ஒரு நாள் கூட மழை இல்லாமல் இருந்தால், வியாபாரிகள் லாபம் இல்லாவிட்டாலும் அசலாவது எடுத்து விடுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
நேற்று அனைத்து கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. காளியம்மன் கோவில் அருகே இனிப்பு பொருட்கள் விற்கும் கடையில், இனிப்புகள் வாங்க, கடையின் உள்ளே இருந்து வெளியில் நீண்ட தூரம் வரை ரேசன் கடையில் நிற்பது போல் காத்திருந்து வரிசையில் நின்று இனிப்புகள் வாங்கி சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu