மாதாந்திர மின் நிறுத்தம் வாபஸ் : மின் வாரியம் தகவல்..!

மாதாந்திர மின் நிறுத்தம் வாபஸ் : மின் வாரியம் தகவல்..!
X

மின் நிறுத்த அறிவிப்பு வாபஸ் (கோப்பு படம்)

குமாரபாளையம், பள்ளிபாளையம், சமயசங்கிலி துணை மின் நிலையங்களில் ஜன. 11ல் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவித்த தகவல் வாபஸ் பெறப்படுவதாக மின்வாரியம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர மின் நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

குமாரபாளையம், பள்ளிபாளையம், சமயசங்கிலி துணை மின் நிலையங்களில் ஜன. 11ல் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவித்த தகவல் வாபஸ் பெறப்படுவதாக மின்வாரியம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளர் கோபால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

குமாரபாளையம், பள்ளிபாளையம், சமயசங்கிலி துணை மின் நிலையங்களில் ஜன. 11ல் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக மேற்படி நாளில் பராமரிப்பு மின் நிறுத்தம் செய்யப்படவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையம் பகுதியில் விசைத்தறி, கைத்தறி, சாயப்பட்டறை உள்ளிட்ட பல தொழில் நிறுவனங்கள் உள்ளன. பொங்கல் திருநாள் ஓரிரு நாள்களில் வரவிருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரம் எனும் அளவில் விடுமுறை விடப்படுவது வழக்கம். இதனால் தொழிலாளர்களுக்கு வருமான இழப்பும் ஏற்படவுள்ளது. அதற்காக தற்போது கூடுதல் நேரம் ஜவுளி உற்பத்தி செய்யப்படுகிறது.

பரப்பரப்பாக தொழில் செய்து வரும் நிலையில், ஜவுளி உற்பத்தி பாதிக்கும் வகையில், தொழிலாளர்கள் வருமானம் பாதிக்கும் வகையில் பொங்கல் திருவிழாவிற்கு மூன்று நாட்கள் இருக்கும் நிலையில் விசைத்தறி உள்ளிட்ட தொழிலாளர்கள் பாதிக்கபடுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு மாதாந்திர மின் நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. துணிக்கடை, நகைக்கடை உள்ளிட்ட பல தொழில் நிறுவனங்களில் பொங்கல் வியாபாரம் அதிக அளவில் இருக்கும் என்ற நிலையில், இந்த மின் நிறுத்தம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வாபஸ் அறிவிப்பால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்