'ஊரடங்கு இல்லை, வாங்கடா கிரிக்கெட் விளையாடுவோம்'

ஊரடங்கு இல்லை, வாங்கடா கிரிக்கெட் விளையாடுவோம்
X
ஊரடங்கு இல்லாததால் ஞாயிறு அன்று கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள்.
ஞாயிறு அன்று ஊரடங்கு இல்லாததால் இளைஞர்கள் ஜாலியாக கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் விளையாட்டு மைதானங்களில் இளைஞர்கள் விளையாடப் போகாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடந்தனர். இந்நிலையில் நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் நேற்றும், இன்றும் நடைமுறையில் இருந்த ஊரடங்கு அறிவிப்பை தமிழக அரசு விலக்கிக்கொண்டது. அதனால் வழக்கமான இயல்பு வாழ்க்கையை மேற்கொண்டு இரண்டு வாரங்களுக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை மக்கள் வாங்க கடைகளில் குவிந்தனர்.

இந்நிலையில் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும் பொழுது போக்கிற்காகவும் விளையாட்டு திடல்களில் மகிழ்ச்சியுடன் கிரிக்கெட் விளையாடியதை நம்மால் காண முடிந்தது. அதேநேரத்தில் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு என்பதால் அடுத்த இரண்டு ஞாயிற்றுக்கிழமை விளையாட முடியாது என வருத்தம் தெரிவித்தனர்.

Tags

Next Story